Advertisement

கனமழை .. தமிழக டிஜிபி முக்கிய உத்தரவு பிறப்பிப்பு

By: vaithegi Wed, 07 Dec 2022 7:00:06 PM

கனமழை   ..  தமிழக டிஜிபி முக்கிய உத்தரவு பிறப்பிப்பு

சென்னை: வங்க கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தென்கிழக்கு வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ளது. அதனால் தமிழகம் மற்றும் புதுவையில் தொடர் மழை பெய்து கொண்டு வருகிறது.

அதை தொடர்ந்து தற்போது நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதன் காரணமாக பல மாவட்டங்களில் புயல் எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

dgp,heavy rain ,டிஜிபி ,கனமழை

இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது மழை மற்றும் புயலால் பாதிக்கப்படுவோர்களுக்கு காவல்துறையினர் உதவ தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இது குறித்து பேசிய அவர், காவல்துறையினருடன் சேர்ந்து மீனவ சமூகத்தினரும் , தன்னார்வலர்களும் படகுகளுடன் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது சென்னையில் 50 பேர் கொண்ட குழு மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளது என தகவல் தெரிவித்துள்ளார்.

Tags :
|