Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில்..... கனமழை எச்சரிக்கை

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில்..... கனமழை எச்சரிக்கை

By: vaithegi Sat, 09 July 2022 2:42:11 PM

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில்..... கனமழை எச்சரிக்கை

சென்னை வானிலை ஆய்வு மையம் 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதேசமயம் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வரும் 13 ஆம் தேதி வரை தமிழகத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

nilgiris,heavy rains ,நீலகிரி,கனமழை

மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :