Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லியில் காற்று மாசு அதிகரித்ததன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை

டெல்லியில் காற்று மாசு அதிகரித்ததன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை

By: vaithegi Fri, 03 Nov 2023 10:20:26 AM

டெல்லியில் காற்று மாசு அதிகரித்ததன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை

புது டெல்லி: தொடக்கப்பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை ... தலைநகர் டெல்லியில் காற்று மாசு என்பது அவ்வப்போது அதிகரித்து வருகிறது. எனவே இதனை கட்டுப்படுத்த வாகனங்களுக்கு கட்டுப்பாடு , பட்டாசுக்கு தடை என பல்வேறு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து கடந்த சில நாட்காளாகவே காற்றின் தரம் மிக குறைந்து காணப்படுவதால், காற்று மாசு அளவானது 350ஐ தாண்டி உள்ளதால், பொதுமக்கள் தங்கள் அன்றாட வேலைகளை செய்வதற்கே பெரும் சிரமப்பட்டு கொண்டு வருகின்றனர்.

holiday,delhi,air pollution ,விடுமுறை ,டெல்லி, காற்று மாசு

டெல்லி காற்று மாசுவை கருத்தில் கொண்டு, அரசு மற்றும் தனியார் தொடக்க பள்ளிகளில் மாணவர்களுக்கு மட்டும் இன்று மற்றும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார் . ஆனால் , ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதே போன்று , தற்போது அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து டெல்லியில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது என டெல்லி மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

Tags :
|