Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெங்களூரில் பல இடங்களில் இன்னும் 2 முதல் 3 நாட்கள் கனமழை தொடரும்

பெங்களூரில் பல இடங்களில் இன்னும் 2 முதல் 3 நாட்கள் கனமழை தொடரும்

By: vaithegi Wed, 07 Sept 2022 3:45:12 PM

பெங்களூரில் பல இடங்களில்   இன்னும் 2 முதல் 3 நாட்கள் கனமழை தொடரும்

பெங்களூரு : கர்நாடகா மாநிலத்தின் தற்போது கனமழை பெய்து பல்வேறு பெங்களூர் நகரம் முழுவதும் வெள்ளத்தில் சிக்கி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், இது பற்றி கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் நேற்று கர்நாடகாவில் குறிப்பாக பெங்களூருவில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது.

கடந்த 90 ஆண்டுகளில் இதுபோன்ற மழை பெய்யவில்லை. அனைத்து குளங்களும் நிரம்பி வழிகின்றன. மேலும் தொடர் மழை பெய்துகொண்டு வருகிறது. முழு பெங்களூரு நகரம் முழுவதிலும் மழை பாதிப்புகள் இல்லை என்றும், குறிப்பிட்ட 2 தாழ்வான பகுதிகளில் தான் வெள்ளம் சூழ்ந்துள்ளது என தெரிவித்துள்ளார். இந்நிலையில், நகரில் வெள்ளத்தில் மூழ்கிய குடியிருப்பு பகுதிகளில் பாதுகாப்பிற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழு அனுப்பப்பட்டது.

heavy rain,bangalore ,கனமழை ,பெங்களூரு


மேலும் கூடுதலாக 2 NDRF குழுக்களை நியமித்துள்ளதாகவும், SDRF, தீயணைப்பு சேவையும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவது என பெங்களூருவின் உதவி கமாண்டன்ட் அறிவித்துள்ளார். இது கடந்த 50 ஆண்டுகளில் நகரின் 2-வது மிகப்பெரிய மழைப்பொழிவு ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து செவ்வாய்க்கிழமை இரவு வரை கனமழை பெய்துள்ளது, மேலும், இந்திய வானிலை ஆய்வு மையம் அங்கு இன்னும் 2 முதல் 3 நாட்கள் கனமழை தொடரும் என்றும் எச்சரித்துள்ளது. பெங்களூருவில் வெள்ளம் மற்றும் கனமழை காரணமாக, கிழக்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தொகுதி கல்வி அலுவலர் நேற்று இரவு வெளியிட்டார். இந்த விடுமுறை அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :