Advertisement

தமிழகத்தில் வருகிற நவம்பர் 6ஆம் தேதி வரை கனமழை தொடரும்

By: vaithegi Fri, 03 Nov 2023 11:12:24 AM

தமிழகத்தில் வருகிற நவம்பர் 6ஆம் தேதி வரை கனமழை தொடரும்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-இலங்கை மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோன்று தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் வரும் 7-ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும்.

இதையடுத்து இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

kanamalai,nilgiris,coimbatore,tirupur,theni,dindigul,madurai,virudhunagar,tenkasi,thoothukudi,tirunelveli,kanyakumari ,கனமழை , நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி ,கன்னியாகுமரி


வருகிற 5-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களிலும், வருகிற 6-ம் தேதி நீலகிரி, கோவை,

மேலும் திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|