Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நவம்பர் 9ல் இருந்து 11ம் வரை சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிகனமழை ஏற்படும்

நவம்பர் 9ல் இருந்து 11ம் வரை சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிகனமழை ஏற்படும்

By: vaithegi Tue, 08 Nov 2022 9:46:34 PM

நவம்பர் 9ல் இருந்து 11ம் வரை சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிகனமழை ஏற்படும்


சென்னை : சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிகனமழை ஏற்படும் .... வங்கக்கடலில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி நவம்பர் 9ல் இருந்து 11ம் தேதிக்குள் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கரையை நோக்கி நகரும். இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிகனமழை ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.எனவே இதன் காரணமாக, 08.11.2022 மற்றும் 09.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

இதனை ஒத்து 10.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

heavy rain,chennai ,அதிகனமழை ,சென்னை

11.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, இராமநாதபுரம், கரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது.

மேலும் 12.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags :