Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று இந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய அதி கனமழைக்கு வாய்ப்பு

இன்று இந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய அதி கனமழைக்கு வாய்ப்பு

By: vaithegi Fri, 22 Sept 2023 3:18:39 PM

இன்று இந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய அதி கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தென் தமிழகம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. மேலும், இந்த கனமழை அடுத்த 7 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனை அடுத்து இன்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், சேலம், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை உள்ளிட்ட 14மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

kanamaha,kanyakumari,tirunelveli,thenkasi,theni,dindigul,madurai,namakkal,salem,dharmapuri,tirupattur,krishnagiri,erode,nilgiris,coimbatore ,கனமழை,கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், சேலம், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை

அதைத்தொடர்ந்து தமிழகத்திலேயே அதிகபட்ச வெப்பநிலையாக மதுரை விமான நிலையத்தில் 37.4 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னையை பொருத்த வரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, மீனவர்கள் இன்று வழக்கம் போன்று கடலுக்குள் மீன் பிடிக்க செல்லலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|
|