Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புரெவி புயல் தாக்கத்தால் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

புரெவி புயல் தாக்கத்தால் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

By: Nagaraj Thu, 03 Dec 2020 08:48:21 AM

புரெவி புயல் தாக்கத்தால் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்... புரெவி புயல் தாக்கம் காரணமாக தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த 5 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புரெவி புயலானது இலங்கையின் திருகோணமலை - பருத்தித்துறை இடையே முல்லைத்தீவு அருகே கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. இன்று இரவு புயல் மன்னார் வளைகுடா நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

heavy rain,hurricane,15 districts,pamban coast ,கனமழை, புரெவி புயல், 15மாவட்டங்கள், பாம்பன் கடற்பகுதி

எனவே தென் தமிழகத்தில் நாளை மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பாம்பன் கடற்பகுதி கடும் சீற்றத்துடன் இருக்கும் என கூறப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை மயிலாப்பூர், அசோக்நகர், போரூர், கிண்டி, பட்டினப்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.

Tags :