Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Thu, 25 Aug 2022 1:40:30 PM

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 25.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர் , தேனி, இண்டுக்கல்‌, கரூர்‌, திருச்சி, சேலம்‌, நாமக்கல்‌, பெரம்பலூர்‌, அரியலூர்‌, கள்ளக்குறிச்சி, கடலூர்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்ட்டுள்ளது.

இதையடுத்து 26.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, நாமக்கல்‌, கரூர்‌, திருச்சி, தென்காசி, திருப்பத்தூர், வேலூர்‌ பகுதிகளில் ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

27.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர், தேனி, திண்டுக்கல், அரியலூர்‌, பெரம்பலூர்‌, கடலூர்‌, விழுப்புரம்‌ , டெல்டா மாவட்டங்கள்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

heavy rain,chennai ,கனமழை ,சென்னை

இதனை தொடர்ந்து 28.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, நாமக்கல்‌, திருப்பத்தூர், கரூர்‌, திருச்சி, அரியலூர்‌, பெரம்பலூர்‌, கடலூர்‌ மற்றும்‌ மயிலாடுதுறை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது.

மேலும் 29.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்கா௫, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தர்மபுரி, சேலம்‌, நாமக்கல்‌, கரூர்‌, மதுரை, சிவகங்கை,அரியலூர்‌, பெரம்பலூர்‌ மற்றும்‌ கடலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :