Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வளி மண்டல மேலடுக்கு சுழற்‌சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

வளி மண்டல மேலடுக்கு சுழற்‌சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

By: vaithegi Sat, 08 Oct 2022 3:23:57 PM

வளி மண்டல மேலடுக்கு சுழற்‌சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, சேலம்‌, கிருஷ்ணகிரி, தேனி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌, கரூர்‌, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, கள்ளக்குறிச்‌சி, கடலூர்‌,, ஈரோடு, நாமக்கல்‌, கரூர்‌, மயிலாடுதுறை, திருச்‌சிராப்பள்ளி, பெரம்பலூர்‌, திண்டுக்கல்‌, நாகப்பட்டினம்‌, அரியலூர்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, ஆகிய மாவட்டங்களில் அக். 9ம் தேதி ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது

அதே போன்று அக்டோபர் 10ம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை, வேலூர்‌, திருவண்ணாமலை, விழுப்புரம்‌, கடலூர்‌, திண்டுக்கல்‌, கள்ளக்குறிச்சி, நாமக்கல்‌, சேலம்‌, ஈரோடு, கரூர்‌, திருச்‌சிராப்பள்ளி,கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, மதுரை, நீலகிரி, சிவகங்கை, பெரம்பலூர்‌, அரியலூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ அக்.10ம் தேதி அன்று புதுவை மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அக்டோபர் 11ம் தேதி புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தமிழகத்தில் ஈரோடு, ராணிப்பேட்டை, நாமக்கல்‌, கிருஷ்ணரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, விழுப்புரம்‌, வேலூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு,

மேலும் சேலம்‌, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர்‌, நீலகிரி மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்தாக அக்.12 அன்று தமிழகம் மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் எனவும் அறிவித்துள்ளது..


Tags :