Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்

தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்

By: vaithegi Wed, 24 Aug 2022 3:29:54 PM

தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு பல  மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எனவே அதன்படி 24.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை முதல்‌ மிக கனமழையும்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்‌சிபுரம்‌, விழுப்புரம்‌, கடலூர்‌, புதுக்கோட்டை, ஈரோடு, திருச்சிராப்பள்ளி, அரியலூர்‌, பெரம்பலூர்‌, கள்ளக்குறிச்‌சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

25.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, ஈரோடு, கிருஷ்ணரி, தர்மபுரி, சேலம்‌, நாமக்கல்‌, கரூர்‌, கள்ளக்குறிச்சி, கடலூர்‌, பெரம்பலூர்‌, அரியலூர்‌, திருச்‌சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, டெல்டா மாவட்டங்கள்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

heavy rain,atmospheric upper circulation,chennai meteorological centre ,கனமழை , வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி,சென்னை வானிலை மையம்

இதை அடுத்து 26.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, புதுக்கோட்டை, கடலூர்‌, விழுப்புரம்‌, செங்கல்பட்டு, வேலூர்‌, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருச்சிராப்பள்ளி, அரியலூர்‌, பெரம்பலூர்‌, கள்ளக்குறிச்சி, டெல்டா மாவட்டங்கள்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் 27.08.2022 மற்றும்‌ 28.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, விழுப்புரம்‌, கடலூர்‌, திருச்சிராப்பள்ளி, அரியலூர்‌, பெரம்பலூர்‌, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 24.08.2022: குமரிக்கடல்‌ – லட்சத்‌தீவு பகுதிகள்‌, கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதை ஒட்டிய தென்கிழக்கு மற்றும்‌ மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மன்னார்‌ வளைகுடா, தென்‌ தமிழக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ இலங்கையை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌ எனவும் தெரிவித்துள்ளது.

Tags :