Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வங்கக்கடலில் நிலவும் அதி தீவிர புயல்.. தமிழகத்தில் அடுத்து வரும் சில நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்

வங்கக்கடலில் நிலவும் அதி தீவிர புயல்.. தமிழகத்தில் அடுத்து வரும் சில நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்

By: vaithegi Tue, 24 Oct 2023 4:37:41 PM

வங்கக்கடலில் நிலவும் அதி தீவிர புயல்.. தமிழகத்தில் அடுத்து வரும் சில நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்


சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் தென் மற்றும் வட தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் மழை பெய்து உள்ளது. அதிகபட்சமாக தமிழகத்தின் வத்திராயிருப்பு பகுதியில் 10 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. வங்கக் கடலில் நிலவி வரும் தீவிர புயல் தற்போது மிக தீவிர புயலாக நிலவி கொண்டு வருகிறது.

இதனை அடுத்து இந்த புயல் நாளை கரையை கடக்கக் கூடும் என்றும், அரபிக்கடலில் நிலவி வரும் மிக தீவிர தேஜ் புயல் இன்று பிற்பகலில் ஏமன் கடற்கரைக்கு அருகில் கடையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தென்தமிழகம், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது

heavy rain,bay of bengal ,கனமழை ,வங்கக்கடல்


மேலும் தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக வடகிழக்கு வங்கக்கடல், வடமேற்கு வங்க கடல், மத்திய வங்கக் கடல், ஒரிசா, மேற்கு வங்காளம் மற்றும் வங்காள தேச கடற்கரைப் பகுதிகளில் இன்று மற்றும் நாளை சூறாவளி காற்று வீசுக்கூடும் என்பதால் அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ள இடங்களுக்கு மீனவர்கள் 2 நாட்கள் ( இன்று மற்றும் நாளை) மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :