Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்றும், நாளையும் இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமாம்

இன்றும், நாளையும் இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமாம்

By: vaithegi Wed, 08 Nov 2023 09:46:36 AM

இன்றும், நாளையும் இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமாம்

சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சதீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

kanamalai,nilgiri,coimbatore,tirupur,theni,dindigul,madurai,virudhunagar,tenkasi,thoothukudi,tirunelveli and kanyakumari. ,கனமழை ,நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி

இதனை அடுத்து 10ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது வானிலை மையம்.

அதனைத்தொடர்ந்து 11ஆம் தேதி முதல் 13.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.

Tags :
|