Advertisement

தெற்கு பிலிப்பைன்சில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

By: Nagaraj Sat, 29 Oct 2022 6:51:24 PM

தெற்கு பிலிப்பைன்சில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

பிலிப்பைன்ஸ்: நிலச்சரிவு ஏற்பட்டது... தெற்கு பிலிப்பைன்ஸில் கனமழை காரணமாக நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பேரழிவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது என்று உள்ளூர் சிவில் பாதுகாப்புத் தலைவர் தெரிவித்தார்.

கோட்டாபாடோவின் உள் நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. சுமார் 300,000 மக்கள் வாழ்கின்றனர். வெள்ளத்தில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கூரையில் தஞ்சமடைந்த சிலரை மீட்புக் குழுவினர் ரப்பர் படகில் மீட்டனர்.

floods,heavy-rains,national weather servic,philippines ,கனமழை, கோட்டாபாடோ, பிலிப்பைன்ஸ், வானிலை ஆய்வகம்

வெள்ளத்தில் மூழ்கிய வீடு மற்றும் இரும்பு வேலி போன்ற புகைப்படங்களை மாவட்ட காவல்துறை முகநூலில் வெளியிட்டது. சில இடங்களில் வெள்ள நீர் வற்றி விட்டது. இருப்பினும், கோட்டாபாடோ நகரின் 90 சதவீதம் தண்ணீரில் மிதக்கிறது.

இதனால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது. வடகிழக்கு திசையில் உருவான வெப்பமண்டல புயல் நல்கே, கனமழையை ஏற்படுத்தக்கூடும் என்று மணிலாவில் உள்ள தேசிய வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.

Tags :
|