தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்; வானிலை மையம் அறிவிப்பு
By: Nagaraj Wed, 24 June 2020 10:30:48 AM
கனமழை பெய்யும்... தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை காலம் தொடங்கிய நிலையில் கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் காவிரியில் நீர் வரத்து அதிகம் ஆகியுள்ளது.
தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. தென்மேற்கு பருவக்காற்று மிக தீவிரமாக வீச தொடங்கி உள்ளது. இதனால் தமிழகத்தில் மழை மேகங்கள் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும் தீவிரமான மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு
மையம் தெரிவித்துள்ளது. அதிகமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழை
பெய்யும். தென்மேற்கு பருவக்காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த
மழை பெய்யும்.
தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மழை அருகே
இருக்கும் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் இதனால் நன்றாக மழை பெய்யும்.
மேலும் தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று
கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவையில் சாரல் மழை பெய்யும். தென்மேற்கு
வங்கக்கடல் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். காற்று வேகமாக
வீசும். அதிகமாக 50 கிமீ வேகத்தில் கூட காற்று வீச வாய்ப்புள்ளது.
இதனால்
மீனவர்கள் அந்த பகுதியில் மட்டும் மீன் பிடிக்க வேண்டாம். வேறு இடங்களில்
மீனவர்கள் கவனமாக மீன் பிடிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.