Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆப்கானிஸ்தானில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 70 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 70 பேர் உயிரிழப்பு

By: Karunakaran Thu, 27 Aug 2020 09:12:35 AM

ஆப்கானிஸ்தானில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 70 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் அந்த நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெருமளவு மழை பெய்வது வாடிக்கையாக உள்ளது. ஆண்டுதோறும் இந்த மழையால் பெரும் வெள்ளம் உருவாகி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள பர்வான், கிழக்கு பகுதியில் உள்ள மைதான் வார்டாக் உள்ளிட்ட பல மாகாணங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.

இந்த மழை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள முக்கிய நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், பர்வான் மாகாணத்தின் மத்திய பகுதி முழுவதும் வெள்ளக்காடாக உள்ளது. அந்த மாகாணத்தில் மட்டும் சுமார் 300 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

heavy rain,afghanistan,70 dead,flood ,பலத்த மழை, ஆப்கானிஸ்தான், 70 பேர் இறப்பு , வெள்ளம்

இந்த வெள்ளம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கிழக்கு மாகாணம் நுரிஸ்தானில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய பயிர்கள் அனைத்தும் நாசமாயின. நெடுஞ்சாலைகள் அனைத்திலும் வெள்ளம் ஓடுவதால் சாலை போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணங்களான கபீஷா, பஞ்ஷீர் மற்றும் கிழக்கு மாகாணங்கள் பாக்டியா, நங்கார்ஹர் ஆகியவற்றில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மழை வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நூற்றுக்கணக்கான மீட்புக்குழுவினர் குவிக்கப்பட்டு முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

Tags :