நேற்றிரவு சென்னையில் பரவலாக மழை; மக்கள் மகிழ்ச்சி
By: Nagaraj Mon, 22 June 2020 11:18:36 AM
சென்னையில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இதனால் குளிர் காற்று வீசியது. முழு ஊரடங்கால் வீடுகளில் முடங்கி உள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாள்கள், பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யவும், தலைநகா் சென்னையில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு சென்னையில் மழை பரவலாக பெய்தது. சென்னையின்
முக்கியப் பகுதிகளான வடபழனி, ஆலந்தூா், போரூா், திருநின்றவூா்,
பூவிருந்தவல்லி, ஆவடி, பட்டாபிராம், செம்பரம்பாக்கம், அம்பத்தூா்
பகுதிகளிலும் சற்று பலத்த மழை பெய்தது. ராயப்பேட்டை, கொளத்தூா்,
ஆதம்பாக்கம், சோழிங்கநல்லூா், அனகாபுத்தூா், உள்ளிட்ட சென்னையின் அனைத்துப்
பகுதிகளிலும் காற்றுடன் நல்ல மழை பெய்தது.
பொதுமுடக்கத்தால்
வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் சென்னை மக்கள் மழையை ரசித்தபடி குளிரை
அனுபவித்தனா். நீண்ட நாட்களுக்குப் பிறகு கனமழை பெய்து வருவதால் மக்கள்
மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.