Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீலகிரியில் கனமழை 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை ...கலெக்டர் தெரிவிப்பு

நீலகிரியில் கனமழை 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை ...கலெக்டர் தெரிவிப்பு

By: vaithegi Wed, 06 July 2022 09:08:29 AM

நீலகிரியில்  கனமழை 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை ...கலெக்டர் தெரிவிப்பு

நீலகிரி: மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.

heavy rain,holiday,nilgiri ,கனமழை ,விடுமுறை ,நீலகிரி

அதன்படி நீலகிரியில் கனமழை காரணமாக 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் அம்ரித் அவர்கள் அறிவித்துள்ளார்.

இதனால் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :