Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இமயமலை பகுதியில் கனமழைக்கு காரணம் புவி வெப்பமடைதல்தான்

இமயமலை பகுதியில் கனமழைக்கு காரணம் புவி வெப்பமடைதல்தான்

By: Nagaraj Sun, 27 Aug 2023 8:43:36 PM

இமயமலை பகுதியில் கனமழைக்கு காரணம் புவி வெப்பமடைதல்தான்

புதுடில்லி: விஞ்ஞானிகள் தகவல்... இமயமலைப் பகுதிகளில் நடப்பாண்டு ஏற்பட்ட கனமழைக்கு புவி வெப்பமடைதலே காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய ஆண்டுகளில் புவி வெப்பமடைதலால் தூண்டப்பட்ட வானிலை அமைப்புகளின் மோதலால் இமயமலைகளில் கனமழை பெய்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

research center,scientists,himalayas,heavy rain,cloudburst ,
ஆய்வு மையம், விஞ்ஞானிகள், இமயமலை, கனமழை, மேக வெடிப்பு

சமீபத்திய ஆண்டுகளில் இமயமலையில் குறைந்த அழுத்த வானிலை அமைப்புடன் பருவமழை ஒன்றிணைவது மிகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் குல்தீப் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்கம் கனமழை அல்லது மேகவெடிப்புகளையும் ஏற்படுத்துவதாகவும், இது உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பால் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் காரணமாகும் என்றும் குல்தீப் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இமயமலை அடிவார மாநிலங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், ஆண்டுக்கு 74 நாட்களாக இருந்த மழை நாட்கள் தற்போது 118 நாட்களாக அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையத் தரவுகள் தெரிவித்துள்ளன.

Tags :