Advertisement

தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை முதலே பலத்த மழை

By: Karunakaran Wed, 22 July 2020 08:51:00 AM

தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை முதலே பலத்த மழை

இந்தியாவில் பரவமழை காலம் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளது. ஆனால் அதற்கு முன்பே வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக பீகார், அசாம், டெல்லி போன்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கடந்த சில நாட்களாக தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பலத்த கனமழை பெய்து வருகிறது. இன்றும் அதிகாலை முதலே பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வெப்பம் தணிந்துள்ளது.

heavy rain,delhi,thunder,lightening ,கன மழை, டெல்லி, இடி, மின்னல்

குடியரசு மற்றும் சுதந்திர தின அணிவகுப்புகள் நடைபெறும் ராஜ்பாத் போன்ற பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அங்கு வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

டெல்லியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. கடந்த சில நாட்களாகவே டெல்லியில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது.

Tags :
|