Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கனமழை .. சுமார் 15 ஆயிரம் விசை மற்றும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை

கனமழை .. சுமார் 15 ஆயிரம் விசை மற்றும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை

By: vaithegi Mon, 14 Nov 2022 3:00:00 PM

கனமழை   ..   சுமார் 15 ஆயிரம் விசை மற்றும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை

புதுச்சேரி: மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வலுவடைந்து வருவதால், கடலோர கிராமங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து கொண்டு வருகிறது. கடல் 3வது நாளாக சீற்றத்துடன் காணப்பட்டது.

இதனால், காரைக்கால் மாவட்டத்தைச்சேர்ந்த காரைக்கால் மேடு, கிளிஞ்சல்மேடு, கோட்டுச்சேரி மேடு உள்ளிட்ட 11 மீனவ கிராமத்தைச்சேர்ந்த சுமார் 15 ஆயிரம் விசை மற்றும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், காரைக்காலிலிருந்து மீன் ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

fishermen,heavy rain ,மீனவர்கள் ,கனமழை

இதையடுத்து மீனவர்கள் கடலுக்குள் செல்லாததால், பெரும்பாலுமான விசைப்படகுகள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் வரிசையாக கட்டிவைக்கப்பட்டுள்ளது. பைபர் படகுகள் காரை க்கால் அரசலாற்றின் கரையோரமும், மீனவ கிராமங்களிலும் பாதுக்காப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

3 -வது நாளாக மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

Tags :