Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழை ... செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து உயர்வு

நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழை ... செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து உயர்வு

By: vaithegi Mon, 19 June 2023 11:00:38 AM

நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழை   ...  செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து உயர்வு

சென்னை: வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து கொண்டு வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர்,

இதனை அடுத்து வேலூர், திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களில் சூறைகாற்றுடன் நள்ளிரவு முதல் கனமழை கொட்டித்தீர்த்து கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, பூவிருந்தவல்லி, மாங்காடு, குன்றத்தூர், செம்பரம்பாக்கம், திருவேற்காடு, போருர் உள்ளிட்ட பல இடங்களிலும் மழை பெய்தது.

flooding,heavy rain ,நீர்வரத்து ,கனமழை

மேலும் திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஜெமின் கொரட்டூரில் அதிப்படியாக 84 மி.மீ.மழையும், பூவிருந்தவல்லியில் 74 மி.மீ மழையும் மதிவாகி உள்ளது. இந்த நிலையில் சென்னைக்கு குடி நீர் வழங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரியின் சுற்றுவட்டத்தில் 107 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது.

இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீரவரத்து உயர்ந்து உள்ளது. காலை நிலவரப்படி ஏரிக்கு 1, 146 மன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியின் மொத்த கொள்ளவான 3,645 மில்லியன் கன அடியில், தற்போது 2,403 கன அடியை எட்டி உள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்ட 24 அடியாக உள்ள நிலையில், தற்போது 19.17 அடியை எட்டி உள்ளது.

Tags :