Advertisement

மிசிசிப்பி மாகாணத்தில் புயலுடன் கனமழை... மக்கள் அவதி

By: Nagaraj Sun, 26 Mar 2023 6:22:24 PM

மிசிசிப்பி மாகாணத்தில் புயலுடன் கனமழை... மக்கள் அவதி

வாஷிங்டன்: புயலுடன் கனமழை... அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத பனிப்புயல் வீசி வருகிறது. நாட்டின் பல மாகாணங்களை தலைகீழாக்கியது.

இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் புயலுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் மிசிசிப்பி மாகாணத்தில் புயலுடன் கனமழை பெய்தது.

அங்குள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்தடை ஏற்பட்டது. அதனால் பல நகரங்கள் இருளில் மூழ்கின.

26 people,america,loss of life,province,storm, ,அமெரிக்கா, உயிரிழப்பு, புயல், மாகாணம், 26 பேர்

பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, தயார் நிலையில் இருந்த மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

வெள்ளத்தில் மூழ்கிய பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த பயங்கர புயலுக்கு இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் சிலர் காணாமல் போயுள்ளதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. அமெரிக்காவில் பனிப்புயல் மற்றும் நிலநடுக்கத்தை தொடர்ந்து பயங்கர புயல் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags :
|