Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்

அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்

By: vaithegi Wed, 26 Apr 2023 2:57:34 PM

அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்

சென்னை: வளிமண்டல மாற்றம் காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு ....... தமிழகத்தில் கூடுதல் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டலத்தின் மேல் மற்றும் கீழடுக்கு சுழற்சி காரணமாக நகரின் ஒரு சில இடங்களில் மழை பொழிவு இருந்து கொண்டு வருகிறது. ஆனால், காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவுவதாக வானிலை மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதையடுத்து தமிழகத்திலேயே அதிகபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 38.6 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருக்கிறது. மேலும், நகரின் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போதும் மழை பெய்து வருவதால் நீலகிரி, கடலூர், மதுரை மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரைக்கும் வெப்பம் குறைந்து இருக்கிறது.

heavy rain,celsius,weather center ,கனமழை ,செல்சியஸ் ,வானிலை மையம்

மேலும் ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி போன்ற 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திப்பதால் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதற்கு அடுத்ததாக சென்னை பொறுத்த வரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :