ஒன்ராறியோ மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு... வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை
By: Nagaraj Mon, 21 Nov 2022 7:07:39 PM
கனடா: ஒன்ராறியோ மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு தொடர்பில் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான காற்று மற்றும் பனிப்பொழிவினால் ஒன்ராறியோ மாகாணத்தில் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய சுற்றாடல் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
மேலும், Barrie, Peterborough, Muskoka, Grey-Bruce மற்றும் Waterloo
போன்ற பகுதிகளில் இன்றிரவு 50 சென்றிமீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும்
என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான
பனிப்பொழிவினால் வாகன சாரதிகள் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடும் என
எச்சரிக்க்கை விடுக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக மின்சாரம்
தடைப்படும் அபாயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன சாரதிகள்
அவதானத்துடன் பயணங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.