Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கன முதல் முக கனமழை பெய்யக்கூடுமாம்

இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கன முதல் முக கனமழை பெய்யக்கூடுமாம்

By: vaithegi Thu, 09 Nov 2023 2:09:28 PM

இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கன முதல் முக கனமழை பெய்யக்கூடுமாம்

சென்னை: நேற்று மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதே பகுதியில் நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டவ மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

மேலும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது .

heavy rain,coimbatore,nilgiris ,கனமழை ,கோவை, நீலகிரி

அந்த வகையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்னாசி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும்

மேலும் நாகப்பட்டினம், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

Tags :