Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த 11 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு ... வானிலை மையம் தெரிவிப்பு

இந்த 11 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு ... வானிலை மையம் தெரிவிப்பு

By: vaithegi Fri, 04 Nov 2022 2:29:52 PM

இந்த 11 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு ...  வானிலை மையம் தெரிவிப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து நீலகிரி, கோவை, திருப்பூர்,தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை,கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

weather center,heavy rain ,வானிலை மையம்,கனமழை

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது.

மேலேயும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். என அதில் கூறப்பட்டுள்ளது.


Tags :