Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று இந்த மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

இன்று இந்த மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Fri, 30 June 2023 4:28:43 PM

இன்று இந்த மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை மழை பெய்ய வாய்ப்பு .... தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. அத்துடன் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து நீலகிரி, கோயம்புத்தூர், கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுவையின் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

heavy rains,nilgiris,coimbatore,cuddalore,chengalpattu,villupuram ,கனமழை ,நீலகிரி, கோயம்புத்தூர், கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம்

இதையடுத்து ஜூலை 3 மற்றும் 4ம் தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், வேலூர் கன்னியாகுமரி, திருப்பத்தூர், தென்காசி, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, ராணிப்பேட்டை திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி. மீ வேகத்திலும் வீசப்படும் அதனால் மீனவர்கள் கடற்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Tags :