Advertisement

தமிழ்நாட்டில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்

By: vaithegi Fri, 11 Nov 2022 11:07:09 AM

தமிழ்நாட்டில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்

சென்னை: கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் ..... தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வடகிழக்கு இலங்கைக்கு அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இருந்தது. அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சற்று வலுவடைந்து தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.

இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை தமிழகம் - புதுவை கடலோரம் வரம். இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 13-ம் தேதி தமிழ்நாட்டில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மழையை கொடுக்கக்கூடியதாக உள்ளது.இதையடுத்து இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

heavy rain,chennai ,கனமழை ,சென்னை

அதிலும் குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வட தமிழக கடலோர பகுதிகளுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்து வரும் நிலையில் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து கொண்டு வருகிறது

Tags :