Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக அக்டோபர் முதல் 2023ம் ஆண்டு பிப்ரவரி வரை கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை

டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக அக்டோபர் முதல் 2023ம் ஆண்டு பிப்ரவரி வரை கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை

By: vaithegi Thu, 23 June 2022 8:24:40 PM

டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக அக்டோபர் முதல் 2023ம் ஆண்டு பிப்ரவரி வரை கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை

டெல்லி : இந்தியாவில் காற்று மாசுபாடால் பெருமளவு பாதிக்கப்படும் ஒரு முக்கியமான யூனியன் பிரதேசம் தேசிய தலைநகர் டெல்லி தான். இந்த காற்று மாசுபாடு பிரச்சனை ஒவ்வொரு ஆண்டும் டெல்லி அரசுக்கு பெரும் தலைவலியாக மாறி வருகிறது.

இப்போது மாசுபாடு தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய அரசு என்னதான் நடவடிக்கை மேற்கொண்டு வந்தாலும் இது குறைந்தபாடில்லை. கடந்த ஆண்டில் கூட காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது.

air pollution,heavy vehicles ,காற்று மாசுபாடு ,கனரக வாகனங்கள்

மேலும், அரசு ஊழியர்கள் அனைவரும் வாகனங்களை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டும் காற்று மாசுபாடு பிரச்சனை மீண்டுமாக உருவெடுத்துள்ளது. இதனால் நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி வரை நீடிக்கும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

இப்போது அக்டோபர் மாதத்தில் இருந்து டெல்லியில் குளிர்காலம் ஆரம்பிப்பதால் காற்று மாசுபாடு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அதிகரிக்கும் காற்று மாசுபாட்டை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனால், அடுத்து வரும் 2023ம் ஆண்டு வரை டெல்லியில் கனரக வாகனங்கள் நுழைவதற்கான தடை அமல்படுத்தப்பட உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

Tags :