Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நியூசிலாந்தில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் மும்முரம்

நியூசிலாந்தில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் மும்முரம்

By: Nagaraj Thu, 16 Feb 2023 11:54:11 AM

நியூசிலாந்தில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் மும்முரம்

வெலிங்டன்: நியூசிலாந்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பெரும்பாலான இடங்களில் சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை நியூசிலாந்தின் வடக்கு தீவு பகுதிகளை கேப்ரியல் என்ற சக்திவாய்ந்த புயல் தாக்கியது. ஹாக்ஸ் பே, ஆக்லாந்து உள்ளிட்ட 5 பகுதிகளை புயல் தாக்கியது.புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்று மற்றும் பலத்த மழை பெய்தது. அங்குள்ள நீர்நிலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, நகரங்களுக்குள் வெள்ளம் புகுந்தது.

குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததையடுத்து பலர் வீடுகளின் கூரைகளுக்குள் சென்று தஞ்சம் அடைந்தனர்.

Tags :