Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இங்கு மீண்டும் பறவை காய்ச்சல் அதிக எண்ணிக்கையில் பரவி வருகிறது

இங்கு மீண்டும் பறவை காய்ச்சல் அதிக எண்ணிக்கையில் பரவி வருகிறது

By: vaithegi Tue, 06 Dec 2022 2:31:32 PM

இங்கு மீண்டும் பறவை காய்ச்சல் அதிக எண்ணிக்கையில் பரவி வருகிறது

ஜப்பான் : உலகம் முழுவதும் பறவை காய்ச்சல் அதிக அளவில் பரவி கொண்டு வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பறவைகளிடம் இருந்து வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது. ஜப்பானில் தற்போது இந்த பறவை காய்ச்சலால் கோழிகள் அதிகம் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் ஜப்பான் நாட்டில் பறவை காய்ச்சல் காரணமாக 9.87 மில்லியன் கோழிகள் கொல்லப்பட்டன. மேலும் மக்களின் நலன் கருதி அனைத்து மாகாணங்களிலும் கோழிக்கறி, முட்டை ஏற்றுமதிக்கு போன்றவற்றிக்கு தடை விதிக்கப்பட்டது.

bird flu,japan ,பறவை காய்ச்சல் ,ஜப்பான்

மேலும் அதே போன்று ஜப்பானில் நடப்பு ஆண்டும் பறவை காய்ச்சல் கோழிகளுக்கு பரவி கொண்டு வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து பரவி வரும் இக்காய்ச்சலால் கோழிகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்ட கோழிகளிடம் இருந்து வைரஸ் மற்ற கோழிகளை தாக்காமல் இருக்க ஜப்பானில் ஆய்ச்சி என்ற மாகாணத்தில் சுமார் 3,10,000 கோழிகளை அழிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஏற்கனவே கோஹிமா மாகாணத்தில் 34,000 கோழிகள் அழிக்கப்பட்டன. மேலும் இதுவரை மட்டும் அந்த நாட்டில் மொத்தமாக 33 லட்சம் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன.

Tags :