Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வீட்டில் வளர்க்கும் பன்னீர் ரோஜா செடி அதிக பூக்கள் பூக்க சில யோசனை

வீட்டில் வளர்க்கும் பன்னீர் ரோஜா செடி அதிக பூக்கள் பூக்க சில யோசனை

By: Nagaraj Sun, 02 Apr 2023 3:46:41 PM

வீட்டில் வளர்க்கும் பன்னீர் ரோஜா செடி அதிக பூக்கள் பூக்க சில யோசனை

சென்னை: நம் நாட்டில் மிகப் பழங்காலத்திலிருந்தே வளர்க்கப்படுகின்ற ரோஜா வகையாக “பன்னீர் ரோஜா செடி” இருக்கிறது. இதை “குல்கந்து” ரோஜா என்றும் சிலர் அழைப்பார்கள். பலவகையான மருத்துவ குணங்கள் நிறைந்த மலர்களை தருகின்ற இந்த பன்னீர் ரோஜா செடியை எப்படி வளர்ப்பது, பராமரிப்பது என்பது பற்றிய சில விஷயங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

பன்னீர் ரோஜா செடி ஒரு வெப்பமண்டல தாவர வகையாகும். இந்தப் பன்னீர் ரோஜா செடியின் பூர்வீகம் சிரியா மற்றும் மத்திய ஆசிய பகுதிகள் என கருதப்படுகிறது. இந்தச் செடி மிதவெப்ப நாடுகளிலும் நன்றாக வளரக்கூடிய ஒரு செடியாக விளங்குகிறது. எனவே இந்தியா போன்ற நாடுகளில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருக்கின்ற சீதோஷண நிலை, மண் வகைகளில் இந்த பன்னீர் ரோஜா செடி நன்கு வளரக் கூடியதாகவே இருக்கிறது.

இந்த பன்னீர் ரோஜா செடியை நாம் முறையாக பராமரித்தால் இந்த ரோஜா செடி 3 மீட்டர் உயரம் வரை வளர்ந்து குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் வரையாவது உயிருடன் இருக்கும் என தோட்டக்கலை மற்றும் தாவரவியல் வல்லுனர்கள் கூறுகின்றார்கள்.

pannier rose,sunlight,opportunities,increase,nurture ,பன்னீர் ரோஜா, சூரிய ஒளி, வாய்ப்புகள், அதிகரிக்கிறது, வளர்த்தல்

தங்கள் தோட்டத்தில் நீண்ட காலம் பன்னீர் ரோஜா செடி இருக்க வேண்டும் என நினைப்பவர்கள். அந்த செடியை நடும் இடம் நன்கு சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த பன்னீர் ரோஜா செடி நம் நாட்டு சீதோஷண நிலைக்கு அனைத்து காலங்களிலும் செடி கன்றினை வாங்கி நட்டு வைத்தால் வளரும் என்றாலும் ஆகஸ்ட் முதல் நவம்பர் மாத காலம் தான் மிகவும் சிறந்தது.

புதிய பன்னீர் ரோஜா செடி கன்றுகளை இந்த மாதங்களில் நடுவதால் அப்போது ஏற்படும் இயற்கையான மழைப்பொழிவு மற்றும் வானிலை தன்மை காரணமாக நன்கு வளர்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துகின்றது.

பன்னீர் ரோஜா செடி நன்கு செழிப்பாக வளர சூரிய ஒளி அதிகம் தேவை என்பதால் வீட்டுத் தோட்டங்களில் இந்த செடியை வளர்க்க விரும்புபவர்கள் மரங்களுக்கு கீழ் இருக்கும் நிழலான பகுதிகளை தவிர்த்து, நன்கு சூரிய ஒளி இருக்கின்ற இடத்தில் இந்த செடிகளை நட்டு வளர்க்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளில் சிறிய தொட்டிகளில் இந்த செடியை வளர்ப்பவர்கள் தினமும் குறைந்த பட்சம் 6 முதல் 7 மணி நேரமாவது சூரிய ஒளியில் இந்த பன்னீர் ரோஜா செடி இருக்கின்ற தொட்டியை வைத்து எடுக்க வேண்டும்.

இந்த பன்னீர் ரோஜா செடிக்கு அதிகம் சூரிய ஒளி கிடைத்தால் மட்டுமே இந்த செடியில் பூக்கள் அதிகம் பூப்பதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கின்றது.

Tags :