Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரேஷன் கார்டு பயனர்கள் உறுப்பினர் பெயரை நீக்க வேண்டுமா வழிமுறை இதோ

ரேஷன் கார்டு பயனர்கள் உறுப்பினர் பெயரை நீக்க வேண்டுமா வழிமுறை இதோ

By: vaithegi Sat, 04 Mar 2023 10:48:51 AM

ரேஷன் கார்டு பயனர்கள் உறுப்பினர் பெயரை நீக்க வேண்டுமா வழிமுறை இதோ

இந்தியா: மாநில அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு கொண்டு வருகிறது. இப்பொருட்களை பெறுவதற்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் ரேஷன் கார்டுகள் முக்கியமானதாகும்.

அந்த வகையில், புதிதாக ரேஷன் கார்டுகளை பெறுவதற்கு முன்பெல்லாம் ரேஷன் விநியோக அலுவலகத்திற்கு சென்று மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமிருந்தது. ஆனால், இப்போதோ ரேஷன் தொடர்பான பணிகளை நாம் வீட்டில் இருந்தபடியே மேற்கொள்ள முடியும்.

procedure,ration card users ,வழிமுறை ,ரேஷன் கார்டு பயனர்கள்

இதையடுத்து புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பது, பெயரை இணைப்பது, பெயர்களை நீக்குவது ஆகிய அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளலாம். இதற்காக தேவைப்படுவது ஸ்மார்ட் போனுடன் இணைய இணைப்பு மட்டும் தான்.

இப்போது, ஸ்மார்ட் போன் உதவியுடன் ரேஷன் கார்டிலிருந்து ஒரு நபரின் பெயரை நீக்க கீழ்காணும் எளிய வழிமுறைகளை பின்பற்றினால் போதுமானதாகும்.

இதற்கு முதலாவதாக, அதிகாரப்பூர்வ TN PDS இணையதளத்தை திறக்கவும்.
அதில், மாநிலத்தை தேர்ந்தெடுக்கவும்.
இப்போது தகுந்த விவரங்களை உள்ளிட்டு லாகின் செய்யவும்.
இப்போது, ரேஷன் கார்டில் யாருடைய பெயரை நீக்க வேண்டுமோ அந்த பெயரை தேர்ந்தெடுக்கவும்.
பிறகு, கேட்கப்படும் ஆவணங்களை (இறப்பு சான்றிதழ் இருந்தால்) இணைக்கவும்.
இறுதியாக, சமர்ப்பி பொத்தானை கிளிக் செய்தால் ரேஷன் கார்டில் இருந்து பெயர் நீக்கப்படும்.


Tags :