Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அவருக்கு திறமையில்லை... இவருக்கு திறமையில்லை; மாற்றி, மாற்றி குற்றம் சாட்டிக் கொள்ளும் ஒபாமா, டிரம்ப்

அவருக்கு திறமையில்லை... இவருக்கு திறமையில்லை; மாற்றி, மாற்றி குற்றம் சாட்டிக் கொள்ளும் ஒபாமா, டிரம்ப்

By: Nagaraj Mon, 18 May 2020 5:39:59 PM

அவருக்கு திறமையில்லை... இவருக்கு திறமையில்லை; மாற்றி, மாற்றி குற்றம் சாட்டிக் கொள்ளும் ஒபாமா, டிரம்ப்

அவருக்கு திறமையில்லை... என்று டிரம்ப் பற்றி ஒபாமாவும், அவருக்குதான் திறமையில்லை என்று ஒபாமா பற்றி டிரம்ப்பும் மாறி மாறி குற்றம் சாட்டி உள்ளார்.

கொரோனா வைரசுக்கு அமெரிக்க மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 15 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 90 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், டிரம்ப் நிர்வாகம் மீது கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.

obama,trump,accusation,talent,america. ,ஒபாமா, டிரம்ப், குற்றச்சாட்டு, திறமை, அமெரிக்கா.

இந்நிலையில் இத்தனை நாட்கள் அமைதி காத்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், கொரோனா வைரஸ், அமெரிக்க தலைமையின் நிர்வாகத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. இங்கு கொரோனா தவிர எதுவும் இல்லை. அதிகாரிகள் எல்லாரும் என்ன செய்கிறார்கள் என்பதை கொரோனா வந்து காட்டிவிட்டது என்று குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் , அதிபர் டிரம்ப்பிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு டிரம்ப் கூறுகையில், ஒபாமா ஒரு திறமையற்ற அதிபராக இருந்தார். முற்றிலும் திறமையற்றவர். அவ்வளவு தான் சொல்வதற்கு வேறில்லை என்றார்.

Tags :
|
|
|