Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது உயர்நீதிமன்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது உயர்நீதிமன்றம்

By: vaithegi Tue, 17 Oct 2023 10:22:29 AM

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது உயர்நீதிமன்றம்

சென்னை: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ... சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 09ம் தேதி காலை 4.30 மணி அளவில் தன்னுடைய படுக்கையிலிருந்து தவறி விழுந்து உள்ளார்.

இதை அறிந்த காவலர்கள் உடனடியாக சிறையில் உள்ள மருத்துவர்கள் அணுகிய நிலையில், அவர்கள் செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கவனித்து உள்ளனர். அதில் செந்தில் பாலாஜியின் இதயத்துடிப்பு வழக்கத்திற்கு மாறாக இருந்தது. எனவே இதன் காரணமாக அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இதனை தொடர்ந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

high court,minister senthil balaji,bail case ,உயர்நீதிமன்றம்,அமைச்சர் செந்தில் பாலாஜி ,ஜாமின் வழக்கு


இதையடுத்து சிகிச்சைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் சிறையில் அடைக்கபட்டார். இதற்கு இடையே உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.

ஏற்கனவே ஜாமின் மனுவை 2 முறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை செய்ததிலிருந்து முழுமையாக குணமடையவில்லை என்பதால் அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு தெரிவித்தது. இந்த நிலையில், இந்த மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

Tags :