Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி கட்டாய கல்வித் திட்டத்தில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்..உயர்நீதிமன்ற கிளை

உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி கட்டாய கல்வித் திட்டத்தில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்..உயர்நீதிமன்ற கிளை

By: vaithegi Tue, 26 July 2022 6:56:53 PM

உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி கட்டாய கல்வித் திட்டத்தில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்..உயர்நீதிமன்ற கிளை

சென்னை : தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பின் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வழக்கம் போல பள்ளிக்கு சென்று கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ம் படி, சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகள் 25 சதவிகித இடங்களில் சேர 2003 ஆம் ஆண்டு அரசு உத்தரவிட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி திட்டம் மூலமாக மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

இந்நிலையில் அதில் சில முறைகேடுகள் நடைபெறுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அது குறித்து நடைபெற்ற விசாரணையில் உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி கட்டாய கல்வித் திட்டத்தில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

admission,compulsory education,high court ,மாணவர் சேர்க்கை ,கட்டாய கல்வி,உயர்நீதிமன்ற

மேலும் ஏழை எளிய குழந்தைகளின் படிப்பிற்காக இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதனால் கட்டாய கல்வி திட்டத்தில் விண்ணப்பிப்போர் 6 கி.மீ. தொலைவில் வசித்தாலும் உத்தரவை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற விதிகளை பின்பற்றினால் மட்டுமே பின்தங்கிய குழந்தைகளின் கல்வி தேவையை பூர்த்தி செய்ய முடியும் என நீதிபதி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் 2022-2023 கல்வியாண்டில் தனியார் மழலையர், தொடக்கப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவிகித ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்க ஏற்கனவே வழிகாட்டுதல்கள் வெளியாகி இருக்கிறது. இனி வரும் ஆண்டுகளில் உச்சநீதிமன்ற உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :