Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் கேள்வி

தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் கேள்வி

By: Nagaraj Sun, 01 Oct 2023 9:31:18 PM

தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: நீதிமன்றம் எழுப்பிய கேள்வி... துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, புகார் அளித்தவர் கருத்து தெரிவிக்க எந்த சந்தர்ப்பமும் அளிக்காமல், வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்தது எப்படி என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

கடந்த 2018ல், துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடந்தது. இதில், 13 பேர் பலியாகினர். சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்கை விசாரணைக்கு எடுத்தது. பின், ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அளித்த அறிக்கை அடிப்படையில் வழக்கை முடித்தது.

இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் வழக்கு தொடர்ந்தார். மீண்டும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அளித்திருந்த அறிக்கை, சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது.

inquiry,adjournment,thoothukudi,opportunity,human rights ,விசாரணை, தள்ளி வைப்பு, தூத்துக்குடி, சந்தர்ப்பம், மனித உரிமைகள்

வழக்கு, நீதிபதிகள் நிஷா பானு, என்.மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அமைத்தது; இழப்பீடு வழங்கியது என, தமிழக அரசின் அறிக்கை அடிப்படையில், வழக்கை முடித்திருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சீலிடப்பட்ட உறையில் இருந்த அறிக்கைகளை பரிசீலித்த நீதிபதிகள், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை அறிக்கை மற்றும் புலனாய்வு பிரிவின் அறிக்கை, அரசுக்கு கிடைத்ததா என்பது குறித்து பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து, வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு சார்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ''தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அறிக்கை நகல் அரசுக்கு வரவில்லை,'' என்றார்.

'புகார் அளித்த தனக்கு, கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை' என, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, புகார் அளித்தவரின் தரப்பை கேட்காமல், தேசிய மனித உரிமைகள் ஆணையம், வழக்கை முடித்து வைத்தது எப்படி என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். விசாரணையை தள்ளி வைத்தனர்.

Tags :