Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெயில் கால முன்னேற்பாடுகள் .. பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்

வெயில் கால முன்னேற்பாடுகள் .. பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்

By: vaithegi Tue, 07 Mar 2023 09:30:23 AM

வெயில் கால முன்னேற்பாடுகள்  ..  பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்

இந்தியா: வெயில் காலத்தை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், பிரதமரின் முதன்மை செயலாளர், மந்திரிசபை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் இதர அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனை அடுத்து இந்த கூட்டத்தில், அடுத்த சில மாதங்களுக்கான வானிலை முன்னெச்சரிக்கை குறித்து பிரதமர் மோடிக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பருவமழை குறித்தும், முக்கியமான பயிர்களின் சாகுபடி எந்த அளவுக்கு இருக்கும் எனவும் அதிகாரிகள் எடுத்துக்கூறினர்.போதிய உணவு தானியங்களை இருப்பு வைக்குமாறு இந்திய உணவு கழகத்துக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

consultation meeting,progress ,ஆலோசனை கூட்டம்,முன்னேற்பாடுகள்

அதைத்தொடர்ந்து அவசரநிலையை சமாளிப்பது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் ஆஸ்பத்திரி கட்டமைப்புகளின் தயார்நிலை பற்றியும் பிரதமருக்கு எடுத்துக்கூறப்பட்டது. அதிகமான வெப்பத்தால் ஏற்படும் பேரிடர்கள் மற்றும் அவற்றை தணிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. அவற்றைக் கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி கூறியதாவது:- இந்திய வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள், எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தினந்தோறும் வானிலை அறிக்கைகளை தயாரிக்க வேண்டும்.

மேலும் டி.வி. செய்தி சேனல்களும், பண்பலை வானொலிகளும் நாள்தோறும் சில நிமிடங்கள் ஒதுக்கி, அவற்றை வாசிக்க வேண்டும்.எனவே அதன்மூலம் மக்கள் தங்களை தயார்படுத்திக்கொள்வார்கள்.ஆஸ்பத்திரிகளில் தீதடுப்பு ஏற்பாடுகள் பற்றி தணிக்கை செய்யப்பட வேண்டும். தீயணைப்பு வீரர்களை கொண்டு தீதடுப்பு ஒத்திகை நடத்தப்பட வேண்டும்.நீர்ப்பாசனத்துக்கான தண்ணீர் வினியோகம், கால்நடை தீவனம், குடிநீர் வினியோகம் ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும்.

இதனைத்தொடர்ந்து வெயில் பாதிப்புகள் குறித்து பள்ளி குழந்தைகளுக்கு விளக்கம் அளிக்கப்பட வேண்டும். அதிகபட்ச வெப்பநிலை நிலவும்போது, என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்பதை துண்டு பிரசுரங்கள், சினிமாக்கள் உள்ளிட்டவை மூலம் விளம்பரப்படுத்த வேண்டும். காட்டுத்தீ பரவுவதை தடுக்கவும், அணைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

Tags :