Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லியில் வெயிலின் தாக்கம் உயர்வு ... பள்ளிகள் இயங்கும் நேரத்தில் மாற்றம்

டெல்லியில் வெயிலின் தாக்கம் உயர்வு ... பள்ளிகள் இயங்கும் நேரத்தில் மாற்றம்

By: vaithegi Fri, 18 Aug 2023 4:35:54 PM

டெல்லியில் வெயிலின் தாக்கம் உயர்வு   ... பள்ளிகள் இயங்கும் நேரத்தில் மாற்றம்

டெல்லி: பள்ளிகள் இயங்கும் நேரத்தில் திடீர் மாற்றம் ... இந்தியா முழுவதும் காலநிலை மாற்றத்தினால் திடீரென கனமழை மற்றும் கடுமையான வெயில் நிலவி கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்திலும் கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது ஓரளவுக்கு வெப்பத்தை தணிக்கும் வகையில் ஆங்காங்கே லேசான முதல் மிதமான மழை பெய்து கொண்டு வருகிறது.

ஆனால், டெல்லியில் வழக்கத்தை காட்டிலும் கடுமையான வெயில் கொளுத்திக் கொண்டு இருப்பதாக வானிலை மையம் அறிவித்து உள்ளது.

schools,delhi,meteorological centre ,பள்ளிகள் ,டெல்லி,வானிலை மையம்

இதையடுத்து இந்த வெயிலின் தாக்கத்தினால் பள்ளிக் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதால் பள்ளி நேரம் மாற்றியமைக்கப்பட இருப்பதாக பள்ளி கல்வித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது, வெயிலின் அளவு நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்கும் நிலையில் பள்ளிகள் இந்நேரத்தில் செயல்படாமல் இருப்பதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. மேலும், ஓரளவுக்கு வெப்பத்தின் அளவு தணியும் வரைக்கும் இந்த நடவடிக்கையை பள்ளி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

Tags :
|