Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொறியியல் தரவரிசை பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார்

பொறியியல் தரவரிசை பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார்

By: vaithegi Tue, 16 Aug 2022 1:57:36 PM

பொறியியல் தரவரிசை பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார்

சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் இன்று வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில் பொறியியல் படிப்புக்கு இந்த ஆண்டு மொத்தம் பதிவு கட்டணம் செலுத்திய மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 69 ஆயிரத்து 80. தமிழ்நாடு மாணவர்கள் பொறியியல் சேர்க்கை 2022-க்கான தரவரிசை பட்டியல் 1 லட்சத்து 58 ஆயிரதது 157 மாணவர்களுக்கு இன்று வெளியிடப்படுகிறது. மொத்தம் விண்ணப்பித்தவர்கள் 2 லட்சத்து 11 ஆயிரத்து 900 பேர். அதில் 1 லட்சத்து 58 ஆயிரம் பேர் இந்த ரேங்க் பட்டியலில் வந்து விடுகிறார்கள். இதிலும் இல்லாதவர்களுக்கு அடுத்த ரேங்க் பட்டியலில் வாய்ப்பு கிடைக்கும்.

இதை அடுத்து இந்த ஆண்டு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டின்கீழ் 22 ஆயிரத்து 587 மாணவர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டு உள்ளது. இது அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை அந்த ரேங்க் பட்டியலில் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. 12,666 மாணவர்களும், 9,981 மாணவிகளும் உள்ளனர். மேலும் இதில் பயன் அடைந்த மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கப்படும் என அறிவித்த முதல்-அமைச்சரின் அறிவிப்பின் படி இந்த 9,981 மாணவிகள் படிப்பில் சேரும் போது இந்த 1000 ரூபாய் வழங்குவதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விளையாட்டு பிரிவின் கீழ் 3,102 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள். அதில் 1,875 மாணவர்களின் சான்றிதழ் சரி பார்க்கப்பட்டு 1,258 மாணவர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது.

அதே போல் முன்னாள் ராணுவத்தினர், வாரிசுதாரர் பிரிவின் கீழ் 970 மாணவர்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் 203 மாணவர்களுக்கும் தரவரிசை எண் வழங்கப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு இட ஒதுக்கீட்டில் தர வரிசை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள இவர்களுக்கு 20-ந்தேதி முதல் சேர்க்கை தொடங்கும். இந்த ஆண்டு 431 பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வில் பங்கு பெற உள்ளது. இந்த கல்லூரிகளில் உள்ள 2.10 லட்சம் இடங்களில் அரசு இட ஒதுக்கீடுகள் 1 லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் உள்ளன. தனியார் கல்லூரிகளில் 65 சதவீதம் அரசு ஒதுக்கீடு கொடுக்கிறோம். இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் 10,968 இடங்கள் சென்று விடும்.

engineering rank,ponmudi ,பொறியியல் தரவரிசை,பொன்முடி

மேலும் அதே மாதிரி இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் தொழில் கல்வி பாடப்பிரிவு வகுப்பை சார்ந்த மாணவர்களுக்கு 2 சதவீத இட ஒதுக்கீடாக 175 இடங்கள் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஒரே மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தர வரிசை எண் வழங்குவதற்கு ஏற்கனவே உள்ள நடைமுறையில் கூடுதலாக அரசின் புதிய வழி காட்டுதலின்படி பிளஸ்-2 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் 10-ம் வகுப்பில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வதால் சம வாய்ப்பு எண்ணின் வகைப்பாடு குறைந்து இந்த வருடம் ஒரு மாணவருக்கு கூட சம வாய்ப்பு எண் பயன்படுத்தவில்லை. ஏனென்றால் பிளஸ்-2 மதிப்பெண்ணையும் பார்க்கிறோம். எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண்ணையும் பார்க்கிறோம். இரண்டு மதிப்பெண்ணையும் கூட்டி பார்த்து அதன் மீது முடிவெடுப்பதால் அந்த பிரச்சினையும் இந்த ஆண்டு எதுவும் வரவில்லை. மாணவ-மாணவிகள் தங்களது தர வரிசை எண்ணை www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். அதில் தர வரிசை பட்டியல் விரிவாக வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் விண்ணப்பித்து தர வரிசை பட்டியலில் தங்களது பெயர் விடுபட்டிருந்தால் அல்லது வேறு குறைகள் இருந்தால் இன்று முதல் 4 நாட்களுக்குள் 19.8.22-க்குள் தங்கள் அருகாமையில் உள்ள தமிழ்நாடு மாணாக்கர் பொறியியல் சேர்க்கை சேவை மையத்தின் மூலம் விண்ணப்பித்து தங்கள் குறைகளை பதிவு செய்யலாம். அவர்களின் குறைகள் ஆராயப்பட்டு அவை நியாயமாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். அதே போன்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அரசு உள் ஒதுக்கீடாக 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்காமல் விடுபட்ட மாணவர்கள் தங்களது அருகாமையில் உள்ள சேவை மையத்திற்கு சென்று 19.8.2022-க்குள் தங்களது பெயரை இணைத்துக் கொள்ளலாம்.

மதுரை. 20-ந் தேதி முதல் சிறப்பு ஒதுக்கீட்டில் வந்தவர்களுக்கும், 25-ந்தேதி முதல் அக்டோபர் 21 வரை பொது ஒதுக்கீட்டில் வருபவர்களுக்கும் இந்த கலந்தாய்வு நடைபெறும். இதை அடுத்து துணை கலந்தாய்வு அக்டோபர் 22 மற்றும் 23-ந்தேதி நடைபெறும். கலந்தாய்வு இறுதி நாள் அக்டோபர் 24-ந்தேதியாகும் என அவர் கூறினார்.

Tags :