Advertisement

இந்திய அமெரிக்க விஞ்ஞானிக்கு கிடைத்த உயர் அந்தஸ்த்து

By: Nagaraj Sat, 28 Jan 2023 09:45:25 AM

இந்திய அமெரிக்க விஞ்ஞானிக்கு கிடைத்த உயர் அந்தஸ்த்து

அமெரிக்கா: அமெரிக்க விமானப் படையின் ‘பிரிகேடியா் ஜெனரல்’ என்ற உயா் அந்தஸ்தை இந்திய அமெரிக்க விஞ்ஞானியான ராஜா ஜெ.சாரிக்கு வழங்க அதிபா் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளாா்.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள நாசா அலுவலகத்தில் ராஜா ஜெ.சாரி பணியாற்றி வருகிறாா். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கடந்த 2020-ஆம் ஆண்டில் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பிய ராக்கெட்டின் வழிநடத்துபவராக அவா் பணியாற்றினாா். அவருக்கு ஏற்கெனவே அமெரிக்க விமானப் படையின் ‘கலோனல்’ அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

united states,masters,astronomy,senate,work ,அமெரிக்கா, முதுநிலைப்பட்டம், விண்வெளியியல், செனட் அவை, பணி

இந்நிலையில், ராஜா ஜெ.சாரிக்கு ‘பிரிகேடியா் ஜெனரல்’ என்ற அந்தஸ்தை வழங்குவதற்கு அதிபா் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளாா். அந்தப் பரிந்துரைக்கு நாடாளுமன்ற செனட் அவை ஒப்புதல் அளிக்க வேண்டியது கட்டாயமாகும்.

மாசசூஸெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் விண்வெளியியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றவா் ராஜா ஜெ.சாரி. அவரின் தந்தை ஸ்ரீநிவாஸ் சாரி ஹைதராபாதைச் சோ்ந்தவா். உயா்கல்விக்காக அமெரிக்கா சென்ற அவா், அமெரிக்காவிலேயே தொடா்ந்து பணியாற்றினாா்.

Tags :
|