Advertisement

உடல்நலக் குறைவால் இந்து முன்னணி ராமகோபாலன் காலமானார்

By: Nagaraj Thu, 01 Oct 2020 09:40:12 AM

உடல்நலக் குறைவால் இந்து முன்னணி ராமகோபாலன் காலமானார்

இந்து முன்னணி ராம கோபாலன் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். ராம கோபாலனின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளதாவது: இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் இராம கோபாலன் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். அவரைது பிரிவால் வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், இந்து முன்னணி அமைப்பினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.

ramagopalan,demise,mourning,chief,ill health ,இராமகோபாலன், மறைவு, இரங்கல், முதல்வர், உடல்நலக்குறைவு

இதேபோல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது: இந்து முன்னணி நிறுவனத்தலைவர் ராம கோபாலன் காலமானார் என்ற துயரச்செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். தி.மு.க.வின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் நிறுவனர் எஸ்.வேதாந்தம், பொதுச்செயலாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி உட்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags :
|
|