Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்துக்கள் என்னை விரும்புகிறார்கள்... இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் தகவல்

இந்துக்கள் என்னை விரும்புகிறார்கள்... இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் தகவல்

By: Nagaraj Sat, 25 Mar 2023 11:26:43 PM

இந்துக்கள் என்னை விரும்புகிறார்கள்... இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் தகவல்

மஸ்கட்: இந்தியாவில் உள்ள பெரும்பாலான இந்துக்கள் என்னை விரும்புகிறார்கள் என்று இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக். அவர் இந்தியாவில் இஸ்லாமிய மத ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் அமைதி தொலைக்காட்சியின் தலைவராக இருந்தார்.

இதனிடையே, அமைதி டிவி மற்றும் மத பிரசாரங்கள் மூலம் பிற மதத்தினர் குறித்து வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இதையடுத்து, ஜாகிர் நாயக் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அவர் மீது தீவிரவாதத்திற்கு நிதி திரட்டுதல், வெறுப்பு பேச்சு, பணமோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

hindus,islam,religious teacher,zakir naik, ,இந்து மதத்தினர், இஸ்லாமியம், ஜாகிர் நாயக், மத போதகர்

ஆனால் ஜாகிர் நாயக் இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு தப்பிச் சென்றார். இதற்கிடையில், ஜாகிர் நாயக்கின் அமைதி டிவி மற்றும் அவரது அறக்கட்டளை இந்தியாவில் செயல்பட தடை விதிக்கப்பட்டது.

இதனால் மலேசிய குடியுரிமை பெற்ற ஜாகிர் நாயக் அங்கு மத பிரச்சாரம் செய்து வந்தார். ஆனால் ஜாகிர் நாயக் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதால் பிரச்சாரப் பேச்சு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் மாத தொடக்கத்தையொட்டி ஓமனில் நிகழ்ச்சி நடைபெற்றது. ஓமனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜாகிர் நாயக், இந்தியாவில் உள்ள பெரும்பாலான இந்துக்கள் என்னை விரும்புகிறார்கள். அவர்கள் என்னை அதிகம் விரும்புவதால் வாக்கு அரசியலுக்கு இது சிக்கலை உருவாக்குகிறது என்றார்.

Tags :
|
|