Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு; அத்வானி வரவேற்பு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு; அத்வானி வரவேற்பு

By: Nagaraj Wed, 30 Sept 2020 4:07:52 PM

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு; அத்வானி வரவேற்பு

பாபர் மசூதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பா.ஜ., மூத்த தலைவர்கள் உட்பட 32 பேரையும் விடுவித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு பாஜ மூத்த தலைவர் வரலாற்று சிறப்பு மக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

பாபர் மசூதி வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரையும் விடுவித்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அத்வானியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

babri masjid,vote bank,release,bjp senior leaders ,பாபர் மசூதி, ஓட்டு வங்கி, விடுவிப்பு, பாஜ மூத்த தலைவர்கள்

இந்த தீர்ப்பு தொடர்பாக அத்வானி கூறுகையில், லக்னோ நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மக்க தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த நாள் எங்களை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், ஓட்டு வங்கிக்காக செய்த சதிச்செயல் வெளிப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.
சிவசேனா வெளியிட்ட அறிக்கையில், இறுதியில் நியாயம் வென்றுள்ளதாக கூறியுள்ளது.

Tags :