செய்தியாளர் மாநாட்டை நடத்துங்கள்; ஜனாதிபதிக்கு வலியுறுத்தல்
By: Nagaraj Tue, 17 Nov 2020 8:04:05 PM
செய்தியாளர் மாநாட்டினை நடத்த வேண்டும்... விசேட உரையை நிகழ்த்துவதற்கு பதில் ஜனாதிபதி செய்தியாளர் மாநாட்டினை நடத்தவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளாரென ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இந்த நிலையிலேயே ஹரீன் பெர்ணான்டோ இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
பொதுமக்கள் மத்தியில் பல கேள்விகள் உள்ளன என்றும் அவர்கள் தங்கள் துயரங்களை
தெரிவிப்பதற்காக காத்திருக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் ஜனாதிபதியாக அவர் இருக்க விரும்பினால் மக்களை அவர் செவிமடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்
செய்தியாளர் மாநாட்டினை நடத்தி அனைத்து ஊடகங்களும் கேள்வி கேட்பதற்கான
நிலையை ஜனாதிபதி உருவாக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.