Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தோடா, கிஷ்த்வார் உள்ளிட்ட சில மாவட்டங்களில் செயல்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தோடா, கிஷ்த்வார் உள்ளிட்ட சில மாவட்டங்களில் செயல்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

By: vaithegi Wed, 22 June 2022 6:11:23 PM

தோடா, கிஷ்த்வார் உள்ளிட்ட சில மாவட்டங்களில் செயல்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தோடா : ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக குறிப்பிட்ட சில மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவின் காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சிக்கித் தவித்தன.

மேலும் தோடா, கிஷ்த்வார் மற்றும் ராம்பான் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட வீடுகள் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவமும் பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஆன்ஸ் ஆற்றில் வெள்ளத்தில் சிக்கிய ஐந்து பேர் காவல்துறையினரால் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சூழலுக்கு மத்தியில் ஜம்மு காஷ்மீரில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு மற்றும் பள்ளிகளையும் மூடும்படி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் டோடாவை தவிர, ராம்பான் மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகள் உட்பட உயர்நிலை வரையிலான அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடும்படிக்கு துணை ஆணையர்கள் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

private schools,heavy rain,holidays ,தனியார் பள்ளிகள்,கனமழை ,விடுமுறை

இந்த நடவடிக்கை குறித்து அரசாங்க அதிகாரிகள் கூறுகையில், ‘கனமழை மற்றும் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு உயர்நிலைப் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளும் இன்று மூடப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

இப்போது வானிலை அலுவலகத்தின் கணிப்பின்படி, கிஷ்த்வார் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையால் முக்கியமாக தேசிய நெடுஞ்சாலை மற்றும் மலைப்பாங்கான சாலைகளில் விமானம் மற்றும் சாலை போக்குவரத்தில் தற்காலிக இடையூறுகள் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags :