Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் 2022-23ம் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமைகளிலும் விடுமுறை...பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் 2022-23ம் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமைகளிலும் விடுமுறை...பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

By: vaithegi Tue, 14 June 2022 12:19:43 PM

தமிழகத்தில் 2022-23ம் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமைகளிலும்  விடுமுறை...பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

தமிழகம்: தமிழகத்தில் தற்போது துவங்கி உள்ள புதிய கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் வெளியீட்டுள்ளது .

கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் நேற்று (ஜூன் 13) மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட 2 வருட இடைவெளிக்கு பிறகு மழலையர் வகுப்புகள் முதல் 10ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆரம்பித்துள்ளது. பள்ளிகள் துவங்கிய முதல் நாளான நேற்று மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு உற்சாகமாக வருகை தந்திருந்தனர். இதற்கிடையில் வகுப்புகள் துவங்கிய ஒரு வாரத்திற்கு, மாணவர்கள் அனைவருக்கும் புத்தாக்க பயிற்சிகளை அளிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

kindergarten classes,schools,school education , மழலையர் வகுப்புகள் ,பள்ளிகள், பள்ளிக்கல்வித்துறை

இதனுடன் 2022-23ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் காலை 9.10 மணிக்கு தொடங்கி மாலை 4.10 மணிவரை நடத்தப்பட இருக்கிறது. இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் சனிக்கிழமைகள் தோறும் விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை முன்பே அறிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வகுப்புகள் செயல்படும். மற்றபடி சனிக்கிழமைகள் தோறும் விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஆனால், இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படலாம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்புகளை பெற்றிருக்கும் நிலையில் இந்த வாரம் முதல் சனிக்கிழமை விடுமுறை அறிவிப்பு நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :