Advertisement

ரேஷன் கடைகளுக்கு இன்று விடுமுறை

By: Monisha Sat, 17 Oct 2020 09:06:18 AM

ரேஷன் கடைகளுக்கு இன்று விடுமுறை

ரேஷன் கடைகளுக்கு இன்று விடுமுறை நாளாக தமிழக அரசின் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கமிஷனர் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடபட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரவல் காரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கப்பட்டது. இந்த பணிகளை ரேஷன் கடை ஊழியர்கள் தங்களது விடுமுறை தினங்களான கடந்த ஜூலை 10, ஆகஸ்டு 7 மற்றும் செப்டம்பர் 4-ந்தேதி ஆகிய நாட்களில் மேற்கொண்டனர்.

ration shop,holiday,token,consumer,staff ,ரேஷன் கடை,விடுமுறை,டோக்கன்,நுகர்வோர்,ஊழியர்கள்

எனவே ரேஷன் கடைகள் வேலை நாட்களாக செயல்பட்ட அந்த நாட்களுக்கு பதில் செப்டம்பர் 19, அக்டோபர் 17(இன்று), நவம்பர் 21-ந்தேதி ஆகிய 3 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது இரண்டாம் விடுமுறை நாள் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த விடுமுறை அடுத்த மாதம் நவம்பர் 21-ந்தேதி வழங்கப்படுகிறது.

Tags :
|