Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு ஜூன் 25 முதல் ஜூலை 25ம் விடுமுறை அறிவிப்பு

அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு ஜூன் 25 முதல் ஜூலை 25ம் விடுமுறை அறிவிப்பு

By: vaithegi Fri, 24 June 2022 3:00:25 PM

அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு ஜூன் 25 முதல் ஜூலை 25ம்  விடுமுறை அறிவிப்பு

அசாம்: அசாமில் உள்ள பகுதிகளான கச்சார், திமஜி, ஹொஜய், கர்பி அங்லோங் மேற்கு, நகாவன் மற்றும் கம்ரூப் ஆகிய மாவட்டங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும், அதிக மழையால் தீம ஹடாவோ மாவட்டத்தில் 12 கிராமங்களில் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த வெள்ளப்பெருக்கால் 32 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியதாகவும், 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 55 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதில் குறிப்பாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குதல், பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்படுதல், நிலச்சரிவுகள், மண்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக தோட்டத்தில் போடப்பட்ட பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளதாகவும், கோபிலி ஆற்றில் மற்றும் பிரம்ம புத்திர ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

holidays,assam,heavy rains ,விடுமுறை ,அசாம் ,கனமழை

அதிகமாக பாதிப்புகள் ஏற்படுத்தியதால் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பாதிப்பு அடைந்த பகுதிகளை பார்வையிட்டு வருகிறார்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கவும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வெள்ளம் பாதித்த பகுதியில் மக்களை மீட்கும் பணியில் ராணுவம், துணை ராணுவ படைகள், அசாம் பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் அவசர கால சேவை துறையை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, இடைநிலைக் கல்வித் துறை, அசாம் அரசின் அனைத்து தொடக்க, மேல்நிலை, உயர் மேல்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கோடை விடுமுறை ஜூன் 25 முதல் ஜூலை 25 வரை நீட்டித்து உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Tags :
|